உடல்நிலையை கண்டறியாமல் கொடுக்கப்படும் மருந்துகளால், பல்வேறு சிக்கல்கள்

Share

Share

Share

Share

விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம டெங்கு மற்றும் இன்புளுவென்சா நோய்த்தொற்றுக்கள் இரண்டும் அதிகரித்து வருவதால், மருத்துவ ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியமானது என தெரிவித்துள்ளார்.

எனவே இரத்தப் பரிசோதனையின் மூலம் இவ்விரு நோய்களையும் தனித்தனியாகக் கண்டறிந்து மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் சிக்கல்களைக் குறைக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

டெங்கு மற்றும் இன்புளுவென்சா ஆகிய இரண்டின் அறிகுறிகளும் ஒரே மாதிரியான வளர்ச்சியைக் காட்டுகின்றன என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் நோயாளியின் உடல்நிலையை கண்டறியாமல் கொடுக்கப்படும் மருந்துகளால், அண்மைய நாட்களில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, காய்ச்சல், இருமல், தொண்டை வலி, தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக இரத்தப் பரிசோதனை செய்து நோயாளியின் நிலையை கண்டறிந்த உடன் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து வகைகளை உட்கொள்ளுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த அரச அதிகாரிகள்!,
சிறுபிள்ளைதனமான விமர்சனங்களை முன்வைக்காமல், ஓரமாக ஒதுங்கி...
தேசிய கல்வியியல் கல்லூரி அனுமதி மீண்டும்...
12 ம் கட்டை வாய்க்கால் பகுதியில்...
கனேடிய பிரஜைகளுக்கு விசா...
மன்னார் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிகோரும்...
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாவட்ட கலெக்டர்களுடன்...
கார் டிரைவரின் வங்கி கணக்கில் திடீரென...
மன்னார் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிகோரும்...
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாவட்ட கலெக்டர்களுடன்...
கார் டிரைவரின் வங்கி கணக்கில் திடீரென...
கனடாவில் லொத்தர் சீட்டு பணப்பரிசுக்கு வரி...