காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் கருணீகர் தெருவைச் சேர்ந்தவர், சூர்யா (20). இவர் தனியார் நிறுவன பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார்.

இவர் மிகவும் பருமனாக இருந்ததால் தனது உடல் எடையை குறைப்பதற்காக தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார். அந்த தனியார் நிறுவனம் வழங்கிய உடல் எடையைக் குறைப்பதற்கான மருந்துகளை வாங்கி, 10 நாட்களாக சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதில் சூர்யாவுக்கு மிக வேகமாக உடல் எடை குறைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி இரவு சூர்யாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. இதன் காரணத்தால் உறவினர்கள் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில் அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சூர்யா சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து சோமங்கலம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றன. இது குறித்து இளைஞர் சூர்யாவின் உறவினர்கள் சிலர் கூறுகையில்,

உடல் எடையை குறைப்பதற்காக மருந்து சாப்பிட்டு வந்த சூர்யா உயிரிழந்திருப்பதால் இது குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தனர்.இதுகுறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது,

உறவினர்கள் மற்றும் பெற்றோர் இளைஞர் உயிரிழப்பு காரணம் உடல் பருமன் குறைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட மருந்து தான் என தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் உயிரிழப்புக்கு அது தான் காரணமா என்று சொல்லிவிட முடியாது எனவே இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றோம் என தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *