கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் விற்பனை செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட ப்ரை வகைகள் இவ்வாறு சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோவில் சில வகை உணவுப் பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனேடிய சுகாதார நிறுவனம் இது தொடர்பிலான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த உணவுப் பொருளை உட்கொண்டதனால் தமக்கு பாதிப்பு ஏற்பட்டதாக வாடிக்கையாளர் ஒருவர் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம், தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்கள் உணவுப் பொருளில் உள்ளடங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.