உலகில் மிகவும் மோசமான மோட்டார் போக்குவரத்து நெரிசல் காணப்படும் நகரங்களின் வரிசையில் றொரன்டோ நகரம் இணைக்கப்பட்டுள்ளது.

INRIX என்னும் மோட்டார் போக்குவரத்து நெரிசல் குறித்த ஆய்வு நிறுவனத்தினால் இது குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி நகரங்களின் வாகன நெரிசல் நிலைமை குறித்த தகவல்களை திரட்டி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மிக மோசமான போக்குவரத்து நெரிசல் நிலை காணப்படும் உலக நகரங்களின் வரிசையில் கனடாவின் றொரன்டோ நகரம் 7ம் இடத்தை வகிக்கின்றது.

கடந்த ஆண்டில் போக்குவரத்து நெரிசல் காரணமாக கனடாவின் றொரன்டோ நகரில் பயணியொருவர் சராசரியாக 118 மணித்தியாலங்களை இழக்க நேரிட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

வட அமெரிக்க நாடுகளில் போக்குவரத்து நெரிசல் நிலை கூடிய நரங்களின் வரிசையில் சிக்காகோ மற்றும் பொஸ்டன் ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்தை றொரன்டோ வகிக்கின்றது.

றொரன்டோ நகரில் வாகனமொன்றின் சராசரி வேகம் மணிக்கு 24 கிலோ மீற்றர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *