ஸிம்பாபே கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர், பயிற்றுவிப்பாளருமான ஹீத் ஸ்ரிக் இன்று புற்று நோய் காரணமாக உலகை விட்டு பிரிந்தார்.

இதனை அவரது மனைவியான நடின் ஸ்ரிக் உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இவர் மரணமானதாக அவரது நண்பரான ஹென்றி ஒலங்கா கூறி இருந்த போது அதனை ஹீத் நகைச்சுவையாக மறுத்து இருந்தார். ஆனால் இன்று உண்மையிலே அவர காலமானது கிரிகெட் ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தி இருக்கிறது.

இவர் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில்  239 விக்கட்டுகள் 2943 ஓட்டங்களையும் டெஸ்ட் போட்டிகளில் 216 விக்கெட்டுகளுடன் 1990 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

இவரது காலமனதை அறிந்த கிரிக்கெட் பிரபலங்கள் தங்களது அஞ்சலிகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *