இது போராட்டத்தின் மற்றுமொரு ஆரம்பம் என பிணையில் விடுதலையான அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முலிகே தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (01.02.2023) பிணையில் விடுதலையான வசந்த முதலிகே, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பில் அவர் கூறும் போது,
இந்த நாட்டில் தொழிற்சங்க கூட்டணிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்னும் பலர் ஒன்றாக இணைந்து முன்னெடுத்த போராட்டம் காரணமாக இந்த குண்டர் அரசாங்கம் மக்களின் அதிகாரத்திற்கு முன்பாக மண்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகியோருக்கு சுருட்டிக்கொண்டு வீடு செல்ல நேரிட்டதன் பின்னர், இன்னொரு குண்டர் ஜனாதிபதியான ரணில், கதிரையில் அமர்ந்து கொண்டு நாட்டை நிர்வகிப்பதற்க்காக இவை செல்லம் செய்யவேண்டும் என வெற்று பேச்சுக்களை கூறி பல விடயங்களை செய்கின்றார்.