எகிப்தின் கெய்ரோவில் நேற்று ரெயில் ஒன்று தடம் புரண்டதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர் என்று எகிப்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எகிப்து போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலியுப்பில் உள்ள ரெயில் நிலைய நடைமேடையில் ரெயில் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து காயமடைந்தவர்களுக்கு உதவ, சுமார் 20 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு சென்றன. ரெயில் தடம் புரண்டதற்கான காரணத்தைக் கண்டறியவும், இதற்கு பொறுப்பானவர்களைக் கண்டறியவும் ஒரு குழுவை அமைக்குமாறு எகிப்து போக்குவரத்து அமைச்சர் கமெல் எல்-வசீர் உத்தரவிட்டுள்ளார்.