எதிர்காலத்தில் அர்பணிப்புக்கள் தேவைப்படலாம் – ஜனாதிபதி (PHOTOS)

Share

Share

Share

Share

பாராளுமன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50% பலத்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் தேர்தலுக்காக ஒன்றுபடுவதை விடுத்து  பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெக்க சகலரும் ஒன்றுபட வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தற்போதும் இந்நாட்டு மக்களில்  பெரும்பாலானோர் தேர்தல் மற்றும் அரசியல் மீது நம்பிக்கை இழந்துள்ளனர் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நுவரெலியா கிரேண்ட்  ஹோட்டலில்  நேற்று (02) நடைபெற்ற “2023/ 2024 தேசிய சட்ட மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு, அரசியல் மற்றும்  பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டிருப்பதால் நெருக்கடியிலிருந்து இலங்கை முற்றாக மீண்டுவிட்டது என்று கருத முடியாதென வலியுறுத்திய ஜனாதிபதி இந்தச் செயன்முறையின் வெற்றிக்கு எதிர்காலத்தில் பாரிய அர்பணிப்புக்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்தார்.

கடந்த பத்து மாதங்களுக்கு முன்பாக இலங்கை முன்னொருபோதும் காணாத பொருளாதார நெருக்கடியை  கண்டதென தெரிவித்த ஜனாதிபதி,  அந்த  நெருக்கடியிலிருந்த மீண்டு வருவதற்கான முயற்சிகளை தாம் உள்ளிட்ட குழுவினர் முன்னெடுத்திருந்தமையையும் சுட்டிக்காட்டினார்.

PMD News
PMD News
PMD News
PMD News
தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட...
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் ! 4...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
மார்க் ஆண்டனி ஹிந்தி பதிப்பிற்கு லஞ்சம்...