கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் அருகே பரவி வரும் வனத்தீயை அணைக்க விமான படையினர் போராடி வருகின்றனர்.

ஏதென்ஸுக்கு வடக்கே உள்ள பர்னிதா மலையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 65 வாகனங்கள், இரண்டு விமானங்கள் மற்றும் ஐந்து ஹெலிகாப்டர்களுடன் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

காட்டுத்தீ தலைநகரை தொடர்ந்து மெனிடி நகருக்கும் பரவியுள்ளது. அங்கு 3 முதியோர் இல்லங்களில் இருந்து 150 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் அருகில் குடி இருப்பவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *