எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்போதைய அரசாங்கம் சாதாரண மக்கள் மீது வரிகளைச் சுமத்தி, ராஜபக்சர்கள் திருடிய பணத்தை அறவிட்டுக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (31.01.2023) இடம்பெற்றிருந்தது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “எமது நாட்டைக் கட்டியெழுப்ப புதிய இலக்கும், தொலைநோக்குப் பார்வையும் தேவைப்பட்டாலும் நடைபாதையில் வியாபாரம் செய்யும் வியாபாரி முதல் எல்லோர் மீதும் தற்போதைய அரசாங்கம் வரிக்கு மேல் வரி விதிக்கின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதாகவே இதற்கு அவர்கள் காரணம் கூறுகின்றனர்.

சர்வதேச நாணய நிதியத்தைக் கையாள்வது என்பது சாதாரண மக்களுக்குக் குறைந்த அழுத்தத்தைக் கொடுப்பதானதாக இருந்தாலும், தற்போதைய அரசாங்கம் சாதாரண மக்கள் மீதும் வரிகளைச் சுமத்தி, ராஜபக்சர்கள் திருடிய பணத்தை அறவிட்டுக்கொண்டிருக்கின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால், நாட்டு மக்கள் மீது எந்த அழுத்தமும் இல்லாத வகையில் சர்வதேச நாணய நிதியத்தை கையாளுமாறு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தற்போதைய ஜனாதிபதியும், ஏனையோரும் சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கு நடனமாடிக் கொண்டிருகின்றனர்.

விவசாயிகள் உள்ளிட்ட சாதாரண மக்களின் துன்பங்களைப் புரிந்து கொள்ளும் பிரேமதாச சகாப்தத்தை உருவாக்குவோம் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *