16வது IPL கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7.30க்கு தொடங்குகிறது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும் (GT), முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் (CSK) மோதுகின்றன.
இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று போட்டி தொடங்கும் முன் பிரமாண்டமான ஆடல் , பாடலுடன் கூடிய கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.
இதுவரை நடந்த ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அதிகபட்சமாக 5 முறை வென்றுள்ளது.