கொழும்பு, ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில், விசேட சமூக சமையலறை நிகழ்ச்சியொன்று, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் இன்று (27) பிற்பகல் இடம்பெற்றது.

கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவின் 05 கிராமிய உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், ஊனமுற்றோர் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர்உள்ளிட்ட 2300 பேருக்கு தினசரி போஷாக்கான உணவை வழங்குவதற்காக ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையை மையமாகக் கொண்டு இந்த சமூக சமையலறை வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

சாகல ரத்நாயக்க இன்று அதற்கான பங்களிப்பை ஏற்றுக்கொண்டிருந்ததுடன் சமூக சமையலறைக்கு வருகை தந்த மக்களுக்கு தனது கைகளால் உணவைப் பரிமாறுவதிலும் இணைந்து கொண்டார்.

ஹுனுப்பிட்டி கங்காராம விஹாராதிகாரி கலாநிதி வண. கிரிந்தே அஸ்ஸஜி தேரரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *