75 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்ததாக நடத்தப்படும் கண்டி “ஜன ரஜ” பெரஹெரா (Janaraja Perahera’) இன்று (19) மாலை வீதி வலம் வரவுள்ளது.
வீதி உலா மாலை 6.30 க்கு ஆரம்பமாகி தலதா வீதி, யட்டி கண்டி வீதி, ராஜா வீதி வழியாக பயணிக்க உள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க, மல்வத்து மற்றும் அஸ்கிரி மகா நாயக்க தேரர்களின் ஆலோசனையின் படி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமேகளும், சதர மகா தேவாலய நிலமேயும் இணைந்து ஊர்வலத்தை நடத்துகின்றனர்.