கடந்த சனிக்கிழமை மதியம் 2.15 மணியளவில், Bowmanvilleயிலுள்ள Crombie தெருவிலுள்ள வீடு ஒன்றில் வாழ்பவர்களின் நலனை அறிவதற்காக பொலிசாருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Bowmanville நகரின் கர்ப்பிணிப்பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ள விடயம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொலிசார் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட அந்த இருவரின் பெயர்களையும் வெளியிட்டுள்ளார்கள். அந்தப் பெண்ணின் பெயர் Rafad Alzubaidy (26), அந்த ஆணின் பெயர் Aram Al- Kamisi என்னும் Aram Kamel (28).

அந்த வீட்டுக்கு பொலிசார் சென்றபோது, அங்கு ஒரு ஆணும், ஒரு கர்ப்பிணிப்பெண்ணும் உயிரிழந்து கிடப்பது தெரியவந்துள்ளது.

இது ஒரு இரட்டைக் கொலை என கூறப்பட்டுள்ள நிலையில், பொலிசார் அருகிலுள்ள வீடுகள் மற்றும் அவ்வழியாகச் சென்ற கார்களிலுள்ள கமெராக்களில் ஏதேனும் இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சிக்கியிருந்தால், உடனடியாக தங்களுக்குத் தெரிவிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *