கனடாவில் ஆபரண கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஒருவர் தனது காற்சட்டை மற்றும் பாதணிகள் என்பனவற்றை இழந்து வீதியில் ஓடிய வினோத சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இனம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அணுகி அவர்களது ஆபரணங்களை பலவந்தமாக அபகரித்துள்ளார்.

இதன் போது குறித்த இருவரும் கொள்ளையருடன் மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மோதல் சம்பவத்தின் போது கொள்ளையர் தனது காற்சட்டை மற்றும் பாதணிகள் என்பவற்றை இந்து விட்டதாகவும் அவற்றை கருத்தில் கொள்ளாது தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காற்சட்டையும் பாதனிகளையும் இழந்த நிலையில் அவசரமாக ஓடி தனது வாகனத்தில் ஏறி குறித்த நபர் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் ஆபரணங்களை இழந்த இருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *