யாழில் கனடாவில் இருந்து வந்தவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் (26) யாழில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, தெல்லிப்பழையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில், மஹாஜனா கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவர்களது ஒன்றுகூடல் நடைபெற்றது.
இதன்போது கனடாவில் இருந்து வருகை தந்த நபர், பாடல் ஒன்றுக்கு நடனமாடிக்கொண்டு இருந்தவேளை திடீரென கீழே விழுந்தார்.
இதனையடுத்து அவரை மீட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அதன்பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலமானது யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
சம்பவத்தில் கனடாவாழ் பிரஜையான , யாழ்ப்பாணம் , மல்லாகம் பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.