கனடாவில் மக்களின் ஆயுட்காலத்தில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இறப்பு வீதம் ஒரு வீதத்தினால் உயர்வடைந்துள்ளது என  தெரிவிக்கப்படுகிறது.  இதே வேளை கனடிய மக்களின் ஆயுட்காலம் 81.7 வயது களிலிருந்து 81.6 வயதாக குறைவடைந்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு புள்ளி விபர தகவல்கள் மூலம் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன

குறிப்பாக புற்றுநோய், இருதய நோய், மித மிஞ்சிய அளவில் மருந்து பயன்படுத்துதல் மற்றும் கோவிட் 19 நோய் தொற்று ஆகிய ஏதுக்களினால் இவ்வாறு அதிகளவு மரணங்கள் சம்பவித்துள்ளன.

கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

கனடாவில் ஆண்களின் மரண வீதம் ஒரு வீதத்தினால் அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2021 ஆம் ஆண்டில் மரண வீதமானது ஒரு வீதத்தினால் அதிகரித்துள்ளது. விபத்துக்கள் மூலமாக மரணங்களின் எண்ணிக்கை 14.5 வீதமாக பதிவாகியுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *