கனடாவில் கடந்த இரண்டு தசாப்த காலத்தில் குடியுரிமை பெற்றுக் கொள்ளும் கனேடிய நிரந்தர வதிவிட உரிமையாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

குடியுரிமை பெற்றுக் கொள்வோர் எண்ணிககையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பிலான விபரங்களை கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2001ம் ஆண்டு முதல் இதுவரையிலான காலப் பகுதியில் நிரந்தர வதிவிட உரிமை உடையவர்களில் குடியுரிமை பெற்றுக்கொள்வோர் எண்ணிக்கை 40 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இவ்வாறு குடியுரிமை பெற்றுக் கொள்வதில் நாட்டம் காட்டமைக்கான காரணங்கள் எதுவும் வெளயிடப்படவில்லை.

இவ்வாறு கனேடிய குடியுரிமை பெற்றுக் கொள்வதற்கு ஆர்வம் காட்டாமை குறித்து கனேடிய குடியுரிமை நிறுவகம் ஆய்வு நடாத்த உள்ளது.

இதேவேளை, கனேடிய அரசாங்கம் குடிவரவினை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *