கனடாவின் ஸ்காப்ரோவின் தனியார் பாடசாலை ஆசிரியர் ஒருவர், மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் பல சந்தர்ப்பங்களில் மாணவர்களை குறித்த ஆசிரியர், பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
போன்ட் அகடமி என்னும் தனியார் பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றிய 50 வயது ஆசிரியர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
றோயல் கார்னி என்ற இந்த ஆசிரியருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த ஆசிரியர் மேலும் மாணவர்களை துஷ்பிரயோகம் செய்திருக்கக் கூடும் என விசாரணையாளர்கள் ஊகம் வெளியிட்ட்டுள்ளனர்.
குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கடந்த 23ம் திகதி பொலிஸார், குறித்த ஆசிரியரை கைது செய்துள்ளனர்.