கனடா ஒரு அபாயகரமான நாடு என்று கூறியுள்ள கனடாவுக்கான ரஷ்ய தூதரான Oleg Stepanov, ஆகவே,, ரஷ்யர்கள் கனடாவுக்கு பயணிக்கவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
பல நாடுகள் ரஷ்யாவுக்குப் போகாதீர்கள் என எச்சரித்துக்கொண்டிருக்கும் நிலையில், ரஷ்ய தூதர் ஒருவர் கனடாவுக்குப் போகவேண்டாம் என எச்சரித்துள்ளார்.
கனடா தடைகள் விதித்துக்கொண்டே இருப்பதாகவும், கனடாவில் ரஷ்யர்கள் இனவெறுப்பை எதிர்கொள்வதாகவும் கூறியுள்ளார் Stepanov.
ஆகவே, ரஷ்யர்கள் கல்வி கற்பதற்காகவோ, சுற்றுலாவுக்காகவோ அல்லது வர்த்தகத்துக்காகவோ ரஷ்யா வருவதை நான் பரிந்துரைக்கவில்லை என்று கூறியுள்ளார் அவர்.
ஆனாலும், பெரும்பாலான கனேடியர்கள் ரஷ்யர்களை நன்றாகவே நடத்துவதாகக் கூறியுள்ள Stepanov, ரஷ்யர்களுக்கான மாஸ்கோவின் பயண எச்சரிக்கை, தெருக்களில் குண்டர்கள் மற்றும் கடுமையான பருவநிலை குறித்ததுதான் என்றும் கூறியுள்ளார்.