கனடா மக்கள் கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும்

Share

Share

Share

Share

கனடாவின் டொரன்டோ பெரும்பாகப் பகுதியில் பாமசிகளில் அதிகளவான கொள்ளை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த சம்பவங்கள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பொலிஸார் 10 பேரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறே கைது செய்த 10 பேரில் ஆறு பேர் இளையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுத முனையில் கொள்ளை சம்பவங்களில் இந்த நபர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் சுமார் 26 கொள்ளை சம்பவங்களுடன் இவர்களுக்கு தொடர்பு உண்டு எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எட்டாம் திகதி தொடக்கம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி வரையிலான காலத்தில் இந்த கொள்ளை சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

களவாடப்பட்ட வாகனங்களில் இந்த கும்பல் பயணிப்பதாகவும் ஆயுத முனையில் பார்மசிகளில் பணியாளர்களிடம் பணம் மற்றும் மருந்து பொருட்களை இவர்கள் கொள்ளை இட்டுச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒட்டாவாவில் கோவிட் காரணமாக நோயாளிகள் மருத்துவமனைகளில்...
ரொறன்டோவில் வீட்டு விற்பனையில் பின்னடைவு
கனடாவில் மாணவர்கள் தொழில்களில் ஈடுபடுவதில் சிக்கல்
விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்