அமெரிக்காவுக்குள் கனடா வழியாக நுழையும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி, குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியின்போது, கனடா அமெரிக்க எல்லையில் பனியில் உறைந்து பரிதாபமாக பலியான சம்பவம் நினைவிருக்கலாம்.
அத்துடன், அவர்களுடன் கூட கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நடந்தே நுழைய முயன்ற சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அவர்களை அமெரிக்காவுக்குள் அனுப்ப முயன்றதாக கடத்தல்காரர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.