சட்டப்படி விமானம் ஏறி கனடாவுக்கு வரும் மெக்சிகோ நாட்டவர்கள், பின்பு கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நடந்தே செல்ல முற்படுகிறார்கள்.

இந்தியக் குடும்பம் ஒன்று நடந்தே கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் உயிரிழந்தது நினைவிருக்கலாம்.

அதாவது நேரடியாக அமெரிக்காவுக்குள் செல்லாமல், கனடாவுக்குள் நுழைந்து, பின் கனடா அமெரிக்க எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைகிறார்கள் மக்கள்.

தற்போது, மெக்சிகோவிலிருந்து இதுபோல் அமெரிக்காவுக்குள் நுழைவோர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

அதாவது, ட்ரம்ப் ஆட்சியின்போது அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையில் உயரமான உலோகத் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டது நினைவிருக்கலாம்.

(உண்மையில் மூத்த ஜார்ஜ் புஷ் காலத்திலேயே அப்படி ஒரு சுவர் ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு எழுப்பப்பட்டது, ட்ரம்ப் பிரம்மாண்டமாக சுவர் எழுப்பியதால், அது ட்ரம்ப் சுவர் என்றே அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது).

ஆக, மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைய தடையாக சுவர் எழுப்பப்பட்டுவிட்டதால், தற்போது வேறொரு வழியைப் பின்பற்றுகிறார்கள் மெக்சிகோ நாட்டவர்கள்.

மொன்றியல் அல்லது ரொரன்றோவிலிருந்து அவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைகிறார்கள்.

பிரச்சினை என்னவென்றால், குளிர் கடுமையாக இருப்பதால், இப்படி நடந்தே எல்லை கடக்க முயல்வது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு விடயமாகும்.

ஆகவே, இப்படி மக்கள் நடந்தே அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுப்பதற்காக சம்பந்தப்பட்ட எல்லைப் பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது அமெரிக்கா. அப்பகுதியில், தற்போது கூடுதலாக 25 பாதுகாப்பு ஏஜண்ட்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். இந்த நடைமுறை திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *