2023 ஆம் ஆண்டில் பசுமை நிதி திட்டங்களுக்கு நிதி திரட்ட, ஒரு வலுவான திட்ட வரைப்படத்தை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன தலைமையில் பசுமை நிதிக் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
ருவான் விஜேவர்தன தலைமையில் நேற்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் இதற்கான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டது.