கிங்ஸ்டன் சாலை அருகே பெண் ஒருவர் சடலம்

Share

Share

Share

Share

ஸ்கார்பரோ மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் ஆண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் ஷெப்பர்ட் அவென்யூ கிழக்கு மற்றும் கிங்ஸ்டன் சாலை அருகே அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ரொறன்ரோ பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதில் காயங்களுடன் ஆபத்தான நிலையில் பெண் ஒருவரை மீட்டுள்ளதாகவும், ஆனால் முதலுதவி அளிக்கும் போதே அவர் மரணமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயர் உள்ளிட்ட தகவல்களை அதிகாரிகள் தரப்பு வெளியிடவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் கொலை வழக்கை விசாரிக்கும் பிரிவினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என பொலிஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
கனடாவில் கொள்ளையிடப்பட்ட பெருந்தொகை நகைகள்