பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதிய விபத்தில் கிரீஸ் நாட்டின் போக்குவரத்து அமைச்சர் கோஸ்டாஸ் கரமன்லிஸ் (Kostas Karamanlis) ராஜினாமா செய்துள்ளார்.

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 43 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் விபத்தில் 72 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்துக்கு ரயில் நிலைய பொறுப்பாளர்  பொறுப்பேற்றாலும், இரண்டு ரயில்களும் எதிர்திசையில் இயக்கப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *