கிருஷ்ணா தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை

Share

Share

Share

Share

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி. ஆகும்.

பூண்டி ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரில் சேமித்து வைத்து தேவைப்படும் போது சென்னை குடிநீருக்காக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும்.

தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் பூண்டி ஏரி முழு கொள்ளளவு எட்டியது. மேலும் கண்டலேறு அணையில் இருந்தும் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதை அடுத்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடம் தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு அனுப்பு வேண்டும். ஜூலை முதல் அக்டோபர் வரை முதல் தவணையில் 8 டி.எம்.சி.யும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும் வழங்க வேண்டும்.

ஏற்கனவே சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் செம்பரம்பாக்கம் கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளது. இதனால் தற்போது வந்து கொண்டிருக்கும் கிருஷ்ணா தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது.

கடலரிப்பை தடுக்கும் வேலைத்திட்டம் சாய்ந்தமருதில் ஆரம்பம்....
வீதி நாடகத்துடன் நடந்தேறிய கல்முனை வலயத்தின்...
மன்னாரிலும் சட்டத்தரணிகள் புறக்கணிப்பு!
பல்கலைக் கழகம் செல்லாத மாணவர்களுக்கு சுகாதார...
எரிப்பொருள் விலை உயர்வோ அதிரடி! மக்கள்...
மன்னாரில் “மைக் டைஸன்” பாணியில் பொலிஸ்...
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
மன்னாரில் “மைக் டைஸன்” பாணியில் பொலிஸ்...
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளம் அதிகரிப்பு