அவுஸ்திரேலிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகளை தளர்த்த சிட்னி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மீண்டும் வாட்ஸ்அப்பை பயன்படுத்தவும், இரவில் வெளியே செல்லவும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
31 வயதான குணதிலக்க தனது பிணை நிபந்தனைகளை மாற்றுமாறு கோரி இன்று (23) மனுவொன்றை சமர்ப்பித்திருந்தார்.
அவர் மீது நான்கு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையிவல் அவர் இதுவரை குற்றங்களை ஒப்புக்கொள்வில்லை.