கெசல்கமுவ ஓயாவில் ஆணின் சடலம்

Share

Share

Share

Share

காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீரேந்திச் செல்லும் பொகவந்தலாவ பொகவான கெசல்கமுவ ஓயாவில் ஆணின் சடலம் ஒன்று இன்று (29.01.2023) ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சடலமாக மீட்கப்பட்ட நபர் இன்று தீடீரென காணாமல் போயுள்ளார். குறித்த நபரை தேடும் நடவடிக்கையினை உறவினர் முன்னெடுக்கப்பட்டப்போதும் குறித்தப் பிரதேசத்தில் உள்ள ஒரு நபரினால் குறித்த நபர் சடலமாக கெசல்கமுவ ஓயாவில் மிதந்துக்கொண்டு இருந்ததை இனங்கண்டு பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்தில் உயிரிழந்த நபரின் பாதணிகள், குடை, மாதாந்த வைத்திய பரிசோதனை, புத்தகம் என்பன மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட குறித்தப் புத்தகத்தில் தனக்கு வியாதி தாங்க முடியவில்லை என்றும் தனது முடிவுக்கு தானே பொறுப்பு என்றும் தனது மகன் மிகவும் நல்லவர் என்றும் தன்னை அன்பாக பார்த்துக்கொள்வார் எனவும் யாரையும் தண்டிக்க வேண்டாம் என்றும் இறந்தவரின்  கையெழுத்தில் இறப்பதற்குமுன்பே எழுதி வைக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட நபர் பொகவந்தலாவ பொகவானை தோட்டப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 75வயது கொண்ட பெரியண்ணன் கருப்பையா என

அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(க.கிஷாந்தன்)

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளம் அதிகரிப்பு
கலிபோர்னியாவில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை
ஸ்பெயினில் ஏற்பட்ட தீ விபத்தில் 13...
தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட...