கொட்டகலை நகரில் 05ஃ03ஃ2022 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தீ விபத்தின் போது தக்க தருணத்தில் தீயணைப்பு கருவிகள் இன்மையால் தீ ஏற்பட்ட கடையில் பொருட்கள் முற்றாக தீக்கரையாகியது.

எனவே இனிவரும் காலங்களில் இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படும் பட்சத்தில் கொட்டகலை பெற்றோலிய களஞ்சிய சாலையில் போதியளவு தீயணைப்பு கருவிகளை வழங்குமாறும் தீக்கரையான வர்த்தக நிலையத்துக்கு வருத்தம் தெரிவிக்கும் நோக்கிலும் கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் கொட்டகலை நகரத்தில் கடைகள் அனைத்தும் திங்கட்கிழமை பகுதிநேரமாக கடைகள் அடைக்கப்பட்டது.

இது தொடர்பில்  கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தினர் தெரிவிக்கையில் கொட்டகலையில் வர்த்தக ஸ்தாபனம் தீக்கரையாகிய போது கொட்டகலை பிரதேச சபை அருகிலுள்ள நகர சபைகளிடம் உதவிகள் கோரிய போதும் உரிய நேரத்தில் உதவிகள் கிடைக்கப்பெறவில்லை.கொட்டகலை பெற்றோலிய களஞ்சியசாலையில் உதவி கோரிய போதும் போதுமான அளவு தீயணைப்பு கருவிகள் இல்லையென குறிப்பிட்டுள்ளனர்.பிறகு நுவரெலியா பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொண்ட பிறகே தீயணைப்பு படையினர் வருகைத்தந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

எனவே இனி வரும் காலங்களில் இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் கொட்டகலை பெற்றோலிய களஞ்சியசாலையில் தேவையான அளவு தீயணைப்பு கருவிகளை வழங்குமாறு அரச அதிகாரிகளுக்கு வழங்க கோரி அடையாள பகுதிநேர கடையடைப்பு கொட்டகலை நகரத்தில் முன்னெடுக்கப்பட்டதாக கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தினர் தெரிவித்தனர்.

நீலமேகம் பிரசாந்த்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *