கொட்டாஞ்சேனையில் இன்று(07) காலை 9.30 அளவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் மீது காரொன்றில் வந்த குழுவினரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.