இலங்கை அணிக்கு எதிரான 2 ஆவது யயிலும் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

இதனால் மூன்று T20களை கொண்ட தொடர் 1:1 என சமநிலையடைந்துள்ளது.

முதலில் விளையாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் 141 ரன்னில் ஆல்அவுட் ஆனது. தனஞ்செய டி சில்வா அதிக பட்சமாக 20 பந்தில் 37 ரன் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.

நியூசிலாந்து தரப்பில் ஆடம் மிலின் 5 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டிம் செய்பெர்ட் 43 பந்தில் 79 ரன் (3 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார்.

முதல் போட்டியில் இலங்கை சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று இருந்தது.

இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.

3வது மற்றும் கடைசி T20 ஆட்டம் வருகிற 8ம் திகதி நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *