சம்பவம் கனடா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள தாக்குதல்

Share

Share

Share

Share

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் லாவல் பகுதியில் சிறுவர்களை இலக்கு வைத்து சாரதி ஒருவர் சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றின் மீது பஸ்ஸை மோத செய்து தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் நான்கு வயதான இரண்டு சிறார்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் மேலும் சில சிறார்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திட்டமிட்ட அடிப்படையில் சிறுவர் பராமரிப்பு நிலைய கட்டிடத்தின் மீது பஸ்ஸை மோதச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய 51 வயதான அமென்ட் என்ற சாரதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் கொலை குற்றத்தில் ஈடுபட்டதாகவும் தாக்குதல் நடத்தியதாகவும் ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்தியதாகவும் போலீசார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதலை மேற்கொண்ட குறித்த சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LPL-ஐ – ஜாலி
டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல்…?
வாடகை வீடுகள் தொடர்பில் அறிக்கை
டிக் டாக் செயலி மீதான தடையினால்...
பிரித்தானியாவில் கனேடியர் ஒருவரின்...
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித...
ஆர்கஸ் உடன்படிக்கை சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும்...
2 விமானங்களும் ஒரே நேரத்தில் ரேடாரின்...
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித...
ஆர்கஸ் உடன்படிக்கை சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும்...
2 விமானங்களும் ஒரே நேரத்தில் ரேடாரின்...
வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள டொலர்கள்