நூருல் ஹுதா உமர், யூ.கே. காலித்தீன்-

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் சீருடை அறிமுக நிகழ்வு சாய்ந்தமருது கமு/கமு/றியாழுல் ஜன்னா வித்தியாலத்தில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை சாய்ந்தமருது கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.சலீம் (ஸர்க்கி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்களின் ஒருவரான ஏ.எஸ். அஸ்வரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேரவைக்கான சீருடையினை அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். நளிர், பேரவையின் மூத்த உலமா அஷ்செய்க் யூ.எல். அஸ்ரப் (தப்லிக்),  ஒருங்கிணைப்பாளர்கள்,  உறுப்பினர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டதோடு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஊடகவியலாளர் யூ.கே. காலித்தீன் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.

சீருடைக்கான அனுசரனையினை மரணித்த தாயின் ஞாபகர்த்தமாக பொறியியளாலர் அலியார் சௌஃபர்  வழங்கியிருந்தமை  குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *