துருக்கியின் காசியான்டெப் நகரில் கடந்த 6-ந் தேதி ரிக்டர் அளவில் 7.8 அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அண்டை நாடான சிரியாவையும் கடுமையாக உலுக்கியது. இந்த நிலநடுக்கத்தால் சிரியாவின் வடக்கு பகுதியில் துருக்கியின் எல்லையோரம் அமைந்துள்ள பல மாகாணங்கள் உருக்குலைந்தன.

ஏற்கனவே உள்நாட்டு போரால் சிதலமடைந்திருந்த ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்தன.

இதில் இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோயின. நிலநடுக்கம் ஏற்பட்டு 2 வாரங்கள் ஆகியும் அங்கு கட்டிட இடிபாடுகளில் இருந்து கொத்து, கொத்தாக பிணங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. ஐ.எஸ். பயங்கரவாதிகள் அட்டூழியம் இயற்கையின் ருத்ர தாண்டவத்தால் ஏற்பட்ட இந்த பேரழிவில் இருந்து சிரியா மீண்டு வருவதற்குள் அங்கு அடுத்தடுத்து சோகங்கள் நிகழ்ந்து வருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை சிரியாவின் மத்திய பாலைவன மாகாணமான ஹோம்சில் உள்ள அல்-சோக்னா நகரில் உணவுப் பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்த மக்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 53 பேர் பலியாகினர்.

பலர் படுகாயம் அடைந்தனர். சிரியாவில் கடந்த ஓர் ஆண்டில் நடந்த மிகவும் மோசமான பயங்கரவாத தாக்குதல் இதுவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *