சிறந்த கொழுந்து பறிப்பாளர் போட்டி

Share

Share

Share

Share

(அந்துவன்)

ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின்கீழ் பணியாற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுள், சிறந்த கொழுந்து பறிப்பாளரை தெரிவுசெய்வதற்கான இறுதி போட்டி நானுஓயா – ரதல்ல, தேயிலை மலையில் நேற்று (25) நடைபெற்றது.

ஹொரண, தலவாக்கலை மற்றும் கெலனிவெலி பெருந்தோட்ட நிறுவனங்களில் கீழ் உள்ள 60 தோட்டங்களில் ஆரம்பக்கட்ட போட்டிகள் நடைபெற்று,

அவற்றில் வெற்றிபெற்றவர்களில் இருந்து 42 பெண் தொழிலாளர்கள் இறுதிப் போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.

20 நிமிடங்கள் வழங்கப்பட்டு, இக்காலப்பகுதிக்குள் கூடுதல் கொழுந்து பறிப்பவர் வெற்றியாளராக தெரிவுசெய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டது.

இப்போட்டியில் தலவாக்கலை, பெருந்தோட்ட நிறுவத்தின் சமர்செட் பிரிவைச் சேர்ந்த  ஆர்.சீதையம்மா முதலிடம் பிடித்தார்.

20 நிமிடங்களுக்குள் 10 கிலோ, 450 கிராம் கொழுந்தை அவர் பறித்திருந்தார். 37 வயதான மூன்று பிள்ளைகளின் தாயான அவருக்கு  3 லட்சம் ரூபா பணப்பரிசும், தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.

இந்த போட்டி நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஹேலிஸ் நிறுவனத்தின் தலைவர் மொகான் பண்டித்தகே, ஹேலிஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் டாக்டர் ரொஷான் ராஜதுரை, உட்பட நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தோட்ட முகாமையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

LPL-ஐ – ஜாலி
டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல்…?
வாடகை வீடுகள் தொடர்பில் அறிக்கை
டிக் டாக் செயலி மீதான தடையினால்...
பிரித்தானியாவில் கனேடியர் ஒருவரின்...
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித...
ஆர்கஸ் உடன்படிக்கை சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும்...
2 விமானங்களும் ஒரே நேரத்தில் ரேடாரின்...
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித...
ஆர்கஸ் உடன்படிக்கை சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும்...
2 விமானங்களும் ஒரே நேரத்தில் ரேடாரின்...
வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள டொலர்கள்