பிரித்தானியாவில் 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், காணாமல்போனதாக கூறப்படும் தந்தை உள்ளிட்ட குடும்பத்தினரை ஐந்து நாட்களுக்கு பின்னர் தான் பொலிஸார் தேடத் தொடங்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சாரா ஷெரீப் என்ற சிறுமியின் கொலை வழக்கில் தற்போது காணாமல்போன மூவருக்கும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த நபர்கள் ஆயுள் முழுவதும் ஒளிந்திருக்க முடியாது எனவும் அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளனர்.

சிறுமி சாரா கொலை வழக்கு தொடர்பில் தற்போது பாகிஸ்தானில் விசாரணை துவங்கப்பட்டுள்ளது.

கடந்த ஒகஸ்ட் மாதம் 10ம் திகதி Woking பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் சிறுமி சாராவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அவரது தந்தை உர்ஃபான் ஷெரீப் இஸ்லாமாபாத்தில் இருந்து லண்டனில் உள்ள பொலிஸாரை அழைத்து தகவல் தெரிவித்த பின்னரே பொலிஸார் சிறுமியின் சடலத்தை மீட்டுள்ளனர்.

இருப்பினும், சிறுமியின் மரண காரணம் தொடர்பில் தற்போதும் மர்மம் நீடிப்பதாகவே கூறப்படுகிறது.

எனினும், உடற்கூறு ஆய்வில் சிறுமி சாரா பலமுறை உள்காயங்களுக்கு ஆளானது தெரியவந்தது.

மேலும் சிறுமியின் சடலம் மீட்கப்படுவதற்கும் ஒருநாள் முன்னர் உர்ஃபான் ஷெரீப் மற்றும் அவரது துணைவி உட்பட மூவர் இஸ்லாமாபாத் தப்பியதாகவே பொலிஸார் நம்புகின்றனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *