சீனாவில் திருடப்படுகின்ற உடல் உறுப்புகள்

Share

Share

Share

Share

சீனாவில் சீன கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அந்நாட்டில் பலூன் கேங், உய்குர், திபெத்திய மற்றும் கிறிஸ்தவர்களில் பலர் சிறை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களிடம் இருந்து உடல் உறுப்புகள் திருடப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு சர்வதேச அளவில் எதிரொலித்து உள்ளது. இதுபற்றி ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரல் என்ற பெயரிலான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து உள்ளன.

இதுபற்றி, சீனாவில் மனித உறுப்புகள் கட்டாய அறுவடை என்ற தலைப்பில் சர்வதேச அளவிலான கருத்தரங்கம் ஒன்றில் பேசிய நிபுணர்கள் உலக சமூகத்திற்கு எச்சரிக்கை விடுத்து உள்ளனர். சட்டவிரோத வகையில் பிடித்து, அடைக்கப்பட்டு உள்ள கைதிகளிடம் இருந்து உறுப்புகள் திருடப்பட்டு அவை விற்பனை செய்யப்படுகின்றன.

இவற்றுக்கு, உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள், அரசாங்கங்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகள், இந்த மனித தன்மையற்ற மற்றும் சர்ச்சைக்குரிய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து உள்ளனர் என அறிக்கை தெரிவிக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு உயிரச்சுறுத்தல்! அஞ்சி...
சிறுவர் தடகள விளையாட்டு போட்டியில் சாய்ந்தமருது...
கடற்றொழிலாளர் பிரச்சினை தீர்விற்கு தமிழ் எம்.பிகள்...
நெல்சன் மண்டேலாவின் பேத்தி மரணம்
ஈராக் நாட்டில் திருமண நிகழ்ச்சியில் திடீரென...
பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கனடா...
இலங்கையில் கனேடியப் பிரஜைகள் மீது தாக்குதல்
அமெரிக்காவில் இறந்த நாய்களின் உடல்களை வைத்திருந்த...
பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கனடா...
இலங்கையில் கனேடியப் பிரஜைகள் மீது தாக்குதல்
அமெரிக்காவில் இறந்த நாய்களின் உடல்களை வைத்திருந்த...
சர்வதேச டென்னிஸ் ஆசிய வீரராக லியாண்டர்...