சுமஷ்டி முறையிலான ஆட்சி ஒன்றை பெற்ற பின்னரே பின் நோக்கி பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அங்ராசன உரையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறினார்.
’13 ஆவது திருத்தம் நல்லதுதான் ஆனால் எமது பிரச்சினைகளுக்கு அது தீர்வாகாது. முன்னாள் வட மாகாண முதலமைச்சர் ன்ற ரீதியில் மத்திய அரசு எவ்வாறு எம்மை வேலை செய்ய முடியாதவாறு தடையாக இருந்தது என்பதை அறிவேன. 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது நல்லது.
ஜனாதிபதியின் உரை சிறந்தது. அரசாங்கம் உறுதியளித்தது உண்மையானது. ஆனால் இடையில் நடப்பதை அவதானிப்பது நல்லது. சுமஸ்டி வழங்கப்பட வேண்டியது. சமஸ்டி அதாவது பெடரல் பெற்றே பின் நோக்கி பார்ப்போம்’ என்றார்.
கேள்வி – 13 ஐ கொண்டு வராமல் விடமாட்டீர்களா… ?
“நாங்கள் சுமஷ்டி முறையை கண்டிப்பாக கொண்டு வருவோம்”