ஜனாதிபதி ரணில்

Share

Share

Share

Share

நான்காவது மற்றும் ஐந்தாவது தொழிற்புரட்சிகளில் உள்ள புதிய தொழில் நுட்பத்துடன் கலந்த டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த தேவையான நவீன தொழில்நுட்பத்தை இலங்கையின் கைத்தொழில்களில் அறிமுகம் செய்து நாட்டிலுள்ள கைத்தொழில் கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் இலங்கையில் நடத்தப்படவுள்ள “புதிய டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி” தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் நேற்று (25) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே ஜனாதிபதி மேற்படி தெரிவித்தார்.

இந்த நாட்டில் உள்ள தொழில்களை புதிய தொழில்நுட்பத்துடன் இணைந்த டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மாற்றுவதனை எவ்வாறு ஊக்குவிப்பது என்பதனை அடையாளங்காண்பதன் மூலம், தற்போதைய நெருக்கடியை வெற்றிகொள்ளவும் , உற்பத்தி மற்றும் செயல்திறனை மேம்படுத்தவும் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது போன்ற விடயங்களை கண்டறிவதே இந்தக் கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும்.

மேலும் நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்து ஒரு ஏற்றுமதி மையமாக இலங்கையை மாற்றுதல், சேவை மற்றும் ஏற்றுமதி துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் நிலையை ஏற்படுத்துதல்,உள்நாட்டுக் கைத்தொழிலுக்காக சிறந்த சர்வதேச நடைமுறைகளைக் கொண்டு வருதல் மற்றும் முன்னணி தொழில்துறையினருடன் வலையமைப்பை ஏற்படுத்துதல் என்பன இதன் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை
“நீங்கள் தனியாக இல்லை என்பதை ஒவ்வொரு...
அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயம்
75ஆவது தேசிய சுதந்திர தின விழா...
சலுகை அடிப்படையில் இலங்கைக்கு உதவி
அமெரிக்கா-சீனா இடையே தைவான் விவகாரத்தால் மோதல்…
தலதா மாளிகையில் விசேட பூஜை
சலுகை அடிப்படையில் இலங்கைக்கு உதவி
அமெரிக்கா-சீனா இடையே தைவான் விவகாரத்தால் மோதல்…
தலதா மாளிகையில் விசேட பூஜை
பிளிங்கன், சீனா தொடர்பில் எடுத்த முடிவு