பொய்யான தகவல்களை வழங்கி, மலேசிய அதிகாரிகளை ஏமாற்றி, கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜோர்டானுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் இன்று (03) காலை குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்கப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஊடாக ஜோர்தானுக்குத் தப்பிச் செல்வதற்காக அவர் இன்று (03) அதிகாலை 03.30 மணியளவில் எயார் அரேபியா விமானமான ஜி.-9501 இல் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

ஏர் அரேபியா விமான சேவை அனுமதி வழங்கும் பணியை மேற்கொள்வதற்காக வந்த அவர், குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை ஆய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் சமர்ப்பித்த கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களில் சந்தேகம் ஏற்பட்டதால் கைது செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *