அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவை அனைத்தும் ஜோ பைடன் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்த 2009 முதல் 2016 ஆண்டு வரையிலான ஆணவங்கள் ஆகும்.
இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசின் அதிமுக்கிய, ரகசிய ஆவணங்கள் அதிபர் ஜோ பைடனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிபர் வீட்டில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக ராபர்ட் ஹுர் தலைமையில் விசாரணைக்கு அமைத்து அமெரிக்க அடர்னி ஜெனரல் மெரிக் ஹார்லெண்ட் உத்தரவிட்டுள்ளார்.