கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ உலகின் முன்னணி சமூக ஊடக செயலிகளில் ஒன்றான டிக் டாக் செயலி மீதான தடையினால் தமது பிள்ளைகள் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமது பிள்ளைகள் டிக் டாக் பயன்படுத்துவது இல்லை என கனடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க சாதனங்களில் டிக் டாக் பயன்படுத்துவது அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளது.

கனடாவின் மத்திய அரசாங்கம் இந்த தடையை அறிவித்துள்ளது.

இதன்படி தமது பிள்ளைகளினாலும் கூட டிக் டாக் செயலியை பயன்படுத்த முடியவில்லை என பிரதமர் ட்ரூடொ குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ட்ரூடோவிற்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதின்மற வயதுடைய கிரேஸ் என்ற மகளும் சேவியர் என்ற மகனும், ஹட்ரியின் என்ற ஒன்பது வயது மகனும் உள்ளனர் .

அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் கனடா விஜயத்தின் போது இரு நாட்டுத் தலைவர்களும் ஒன்றாக நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமது பிள்ளைகளின் தனி உரிமை தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் உத்தரவுக்கு அமைய தனது பிள்ளைகள் இருவரும் டிக் டாக் செயலியை பயன்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இது அவர்களுக்கு பெரும் அதிருப்தியான விடயம் என குறிப்பிட்டுள்ளார்.

டிக் டாக் போன்ற செயலிகள் பிழையான தகவல்களை பரப்பப்படுவதாகவும் இள வயதினரை ஆக்கிரமித்துக் கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *