ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றின் இறுதி போட்டியில் இலங்கை ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெற்ற சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 2 ஓட்டங்களால் வெற்றியீட்டி சுப்பர் 4 ற்குள் நுழைந்தது .
சூப்பர் 4 ல் இந்தியா , பாகிஸ்தான், பங்களாதேஸ் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 292 ஓட்டங்களை பெற்றது
இதில் குசல் மென்டிஸ் சிறப்பாக ஆடி 92 ஓட்டங்கள், பதும் நிஸாங்க 41 ஓட்டங்கள், துனித் வெல்லாகே 33 ஓட்டங்கள் , பந்துவீச்சில் குல்படீன் நபிப் 60 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகள். ரஸித் கான் 63 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகள்.
வெற்றி இலக்கான 292 ஓட்டங்களை 37.1 ஓவர்களில் ஆப்கான்ஸ்தான் அணி எடுத்து வெற்றிப்பெற்றால் இலங்கை அணி சூப்பர் லீக்கில் இருந்து வெளியேறும்.
இதன்படி ரொக்கெட் வேகத்தில் ஆப்கான்ஸ்தான் ஆடி இறுதியாக 37 வது ஓவரில் 3 ஓட்டங்கள் பெற இருந்தது அந்நேரம் பந்துவீசிய தனஞ்செய இறுதி இரண்டு விக்கெட்டுக்ளையும் கைப்பற்றினார்.
ஓட்டவீத அடிப்படையில் ஆப்கானிஸ்தான் முன்னிலையில் இருந்ததனால் இறுதி 37 ஓவரில் 295 ஓட்டங்களை பெற்று இருந்தாலும் சூப்பர் லீக்கில் நுழைந்திருக்க முடியும்.ஆனால் அவர்கள் அதனை அறியாமல் இறுதி துடுப்பாட்ட வீரரான பாருக்கி பந்தை நிதானமாக ஆடியது விளையாட்டு வர்ணனயாளர்களால் விமர்சிக்கப்பட்டார்.
மொகம்ட் நபிப் அதிரடி ஆட்டம்
ஒரு கட்டத்தில் ஆப்கான்ஸ்தான் அணி பின்னடைவாக இருந்த போது நபிப் 32 பந்துகளில் 5 சிக்ஸர்களையும். 6 பவுண்டரிகளையும் விலாசி 65 ஓட்டங்களை பெற்று அணியை வெற்றியின் விழிம்பிற்கு கொண்டு சென்றார்.
இந்த போட்டியில் 24 பந்துகளில் இவர் அரைசதத்தை பூர்த்தி செய்து ஆப்கான்ஸ்தான் அதிகவேகம பெற்ற அரைச்சதம் என்ற சாதனையை நிலை நாட்டினார்.
ஆப்கானிஸ்தான் அணி 37. 4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 289 ஓட்டங்கள்.
இதில் நபிப் 65 ஓட்டங்கள், அணித்தலைவர் ஹிஸ்மத்துல்லா 59 ஓட்டங்கள் பந்துவீச்சில் கசுன் ராஜித்த 79 ஓட்பங்களுக்கு 4 விக்கெட்டுகள், துனித் வெல்லாலகே 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகள், தனஞ்ஜெய டி சில்வா 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்கள்..
ஆட்டநாயகனாக குசல் மென்டிஸ் தெரிவானார்.
.