ஒன்ராறியோவின் மார்க்கம் பகுதியில் இருந்து திடீரென்று மாயமான பெண்மணி ஒருவர் தொடர்பில் மூன்று வாரங்களாக எந்த தகவலும் இல்லை என்றே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மார்ச் 3ம் திகதி மதியத்திற்கு மேல் சுமார் 8.30 மணியளவில் 53 வயதான இசபெல்லா டான் கடைசியாக காணப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் பொலிசார் முன்னெடுத்துள்ள முதற்கட்ட விசாரணைக்கு பின்னர், இசபெல்லா டான் சம்பவத்தன்று உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்றே தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவர் உடற்பயிற்சி கூடம் செல்லாமல், திடீரென்று எந்த அடையாளமும் இல்லாமல் மாயமாகியுள்ளார். இசபெல்லா டான் மாயமாகியுள்ள சம்பவம் வழக்கத்திற்கு மாறானது என குறிப்பிட்டுள்ள யோர்க் பொலிசார், இந்த வழக்கினை படுகொலை மற்றும் மற்றும் மாயமானோர் வழக்குகளை விசாரிக்கும் பிரிவுக்கு மாற்றியுள்ளனர்.

சம்பவத்தன்று இசபெல்லா டான் தமது வாகனத்தில் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லவில்லை எனவும், அவரது வாகனம் அவரது குடியிருப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்ததையும் பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

மேலும், இசபெல்லா டான் உறுப்பினராக உள்ள உடற்பயிற்சி கூடத்தில் அவரது உறுப்பினர் அட்டையை சம்பவத்தன்று பயன்படுத்தியுள்ளார், ஆனால் அது பகல் 7.46 மணிக்கு என்பதும் விசாரணையில் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி, அவர் மாயனதன் ஐந்து நாட்களுக்கு பின்னரும் தொடர்புடைய உடற்பயிற்சி கூடத்தில் அவரது உறுப்பினர் அட்டை பயன்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் கடத்தப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் பொலிசார் இதுவரை உறுதி செய்யவில்லை, ஆனால் அவரது நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *