தினமலர் பத்திரிகையில் “மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு , கக்கூஸ் நிரம்பி வழிகிறது ” என்ற தலைப்பை பத்திரிகையின் தலைப்பு செய்தியாக வெளியிட்டதை அண்ணாச்சி செய்தி சேவை வன்மையாக கண்டிக்கிறது. ஊடக அறத்தை பாதுகாக்க வேண்டியவர்கள் ஊடக மாப்பியாக்களாக செயற்பட கூடாது .

தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசு பாடசாலை நடுநிலை மாணவர்களுக்கான சத்து உணவு திட்டத்தை அமுல் படுத்தியது. இதனை பலர வரவேற்றனர்.

ஆனால் தமிழ் நாட்டில் வெளிவரும் பழம்பெரூம் பத்திரிகையான தினமலர் தமது தலைப்பில் “மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு , கக்கூஸ் நிரம்பி வழிகிறது”  என நையாண்டியாக போட்டு இருக்கிறது

இதனை தி.மு க தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வன்மையாக கண்டித்துள்ளார்.

அத்துடன் தமிழ்நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

ஆயினும் இந்த செய்தி ஒரு பதிப்புக்களில் தவறுதலாக வெளிவந்திருப்பதாக அதன் நிர்வாக கி.ராமசுப்பு டூவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த பத்திரிகையை புறக்கணிக்க சொல்லி பல போராட்டங்கள் நடைப்பெறுகின்றன.

ஊடக தர்மம் பெண்ணின் கற்பை போன்றது என்பதை ஊடகவியலாளர்கள் நினைவில் வைத்து கொள்ளுங்கள்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *