துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…

Share

Share

Share

Share

துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 200 ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துருக்கி நாட்டின் தெற்கு பகுதியான காசியான்டெப் அருகே இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8ஆகப் பதிவானது. காசியான் டெப் மாகாணம் நுர்நாகி நகரில் இருந்து 23 கி.மீ. தொலைவில் நிலநடுக்கமானது மையம்கொண்டிருந்தது.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்தன. கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இதுவரை 200 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பலர் காயமடைந்தனர். தொடர்ந்து அப்பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

துருக்கியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் லெபனான், ஜோர்டான், பிரிட்டன், ஈராக் உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.

பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த அரச அதிகாரிகள்!,
சிறுபிள்ளைதனமான விமர்சனங்களை முன்வைக்காமல், ஓரமாக ஒதுங்கி...
தேசிய கல்வியியல் கல்லூரி அனுமதி மீண்டும்...
12 ம் கட்டை வாய்க்கால் பகுதியில்...
கனேடிய பிரஜைகளுக்கு விசா...
மன்னார் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிகோரும்...
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாவட்ட கலெக்டர்களுடன்...
கார் டிரைவரின் வங்கி கணக்கில் திடீரென...
மன்னார் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிகோரும்...
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாவட்ட கலெக்டர்களுடன்...
கார் டிரைவரின் வங்கி கணக்கில் திடீரென...
கனடாவில் லொத்தர் சீட்டு பணப்பரிசுக்கு வரி...