துருக்கியில் மொத்த பலி எண்ணிக்கை 15,000ஐ தாண்டியது.

சுர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

நேற்று பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டபோது ஜனாதிபதி தாயிப் எர்டோகன் இத்தகவலை கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:- முதல் நாளில் மீட்புப்பணியில் தொய்வு இருந்தபோதிலும், தற்போது நிலைமை சரியாகிவிட்டது. துருக்கியில், 1 கோடியே 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் யாரையும் தெருவில் நிற்கவிட மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

சிரியாவில் 2 ஆயிரத்து 500-க்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். அதனால் இரு நாடுகளிலும் மொத்த பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டி விட்டது.

இருப்பினும், பலர் உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *