துருக்கி நிலநடுக்க பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

Share

Share

Share

Share

துருக்கி- சிரியா எல்லையில் நேற்று முன்தினம் அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்க பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. துருக்கியில் 7,108 பேரும், சிரியாவில் 2,530 பேரும் உயிரிழந்துள்ளனர், மொத்தம் 9,630 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் மீட்பு பணிகளில் துருக்கி அரசுக்கு உதவ இந்திய உள்பட பல்வேறு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்தியாவில் இருந்து பேரிடர் மீட்பு படையினர், மருத்துவர்கள் உள்ளிட்ட குழுவினர் துருக்கிக்கு விரைந்துள்ளனர்.

 

ஒட்டாவாவில் கோவிட் காரணமாக நோயாளிகள் மருத்துவமனைகளில்...
ரொறன்டோவில் வீட்டு விற்பனையில் பின்னடைவு
கனடாவில் மாணவர்கள் தொழில்களில் ஈடுபடுவதில் சிக்கல்
விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்