இஸ்லாமிய நாடான துருக்கியில் குர்து இன மக்கள் தங்களுக்கு தனிநாடாக குர்திஸ்தானை அறிவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

அதற்கு ஆதரவாக குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி தொடங்கி குர்து இன மக்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் வசிக்கும் யாசிதி இன மக்கள் சிறுபான்மை இனத்தவர்களாக கருதப்படுகிறார்கள்.

சின்ஜார் பாதுகாப்பு பிரிவு என்னும் பெயரில் அமைப்பு தொடங்கி யாசிதி இனமக்களின் நலனை காக்க அவர்கள் போராடுகிறார்கள்.

இந்த இரு அமைப்புகளும் இணைந்து துருக்கி மற்றும் ஈராக் நாடுகளை அச்சுறுத்தும் வகையில் பயங்கரவாத செயல்கள் பலவற்றை அரங்கேற்றி வருகிறது.

இதனால் இந்த இரு அமைப்புகளையும் துருக்கி, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் சேர்த்து அவற்றுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *